singer1சித்திரப்பூவிழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டுக்கரும்பினை
தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ யார் வந்தவரோ
சித்திரப்பூவிழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டுக்கரும்பினை
தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ யார் வந்தவரோ
singer2தென்றல் அழைத்து வர
தங்கத்தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்து வர
தங்கத்தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே இடம் தந்த என் மன்னவரே
சித்திரப்பூவிழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்தக் கட்டுக்கரும்பினை
தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே
யார் நின்றவரோ
அவர் தான் என்னவரே
singer1கட்டழகில் கவி கம்பன்
மகனுடன் ஓட்டி இருந்தவரோ
இந்தப் பட்டு உடலினை தொட்டணைக்கும்
கலை கற்றுத் தெளிந்தவரோ
singer1கட்டழகில் கவி கம்பன்
மகனுடன் ஓட்டி இருந்தவரோ
இந்தப் பட்டு உடலினை தொட்டணைக்கும்
கலை கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
நீ கற்றுக் கொடுத்ததை
ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ
சித்திரப்பூவிழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டுக்கரும்பினை
தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ
singer2வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ
வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ
ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில்
கவி மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னை கொடுத்தென்னை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரணையே
மனம் எங்கும் நிறைந்தவரே
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
சித்திர பூவிழி வாசலிலே அவர்தான் நின்றவரே
இந்தக் கட்டுக்கரும்பினை
தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே
யார் நின்றவரோ அவர் தான் என்னவரே