Film Anbulla Appa
Music Shankar Ganesh
Singer K J Yesudas
Lyricist Vairamuthu
மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கள செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்கோலம்
கோலம்...ம்..ம்...திருக்கோலம்....
மரகதவல்லிக்கு...மணக்கோலம்
என் மங்கள செல்விக்கு மலர்க்கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்
கோலம்...திருக்கோலம்...
காலையில் கதம்பங்கள்
️அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்..
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டி தங்கம் இனிமேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ?
கட்டி கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ !
தினம் தோறும் திருநாளோ
மரகதவல்லிக்கு மணக்கோலம்..
என் மங்கள செல்விக்கு மலர்க்கோலம்
கண் மணி தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்கோலம்..
கோலம்...திருக்கோலம்.
ஆ..ஆ..ஆ..ஆ.ஆஆ ...ஆ ஆ...
மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு ...கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்..
உற....வொ...ன்று பிரிவதில்
அழுது விட்டேன்.....
எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டி ..போகிறது...
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டி பார்க்கிறது
இமைகள் அதை மறைகிறது...
மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கள செல்விக்கு மணக்கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்கோலம்
கோலம்...திருக்கோலம்
கோலம்...திருக்கோலம்..
(மகள்களை பெற்ற அத்தனை அப்பாவி
அப்பாவுக்கும் சமர்ப்பணம்)
Thanks for joining. ️
Sorry for the song quality