menu-iconlogo
logo

Inbame undhan Per

logo
Paroles
M:இன்பமே...

உந்தன் பேர் பெண்மையோ

இன்பமே..

உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி

நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி

F:இன்பமே

உந்தன் பேர் வள்ளலோ

இன்பமே

உந்தன் பேர் வள்ளலோ

உன் இதயக் கனி

நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி

உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி

இன்பமே

உந்தன் பேர் வள்ளலோ

F:சர்க்கரைப் பந்தல் நான்

தேன்மழை சிந்த வா

சர்க்கரைப் பந்தல் நான்

தேன்மழை சிந்த வா

சந்தன மேடையும் இங்கே

சாகச நாடகம் எங்கே

M:தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை

ஓரிரு வாழைகள் தாங்கும்

தேவதை போல் எழில் மேவிட நீ வர

நாளும் என் மனம் ஏங்கும்

M:இன்பமே....

உந்தன் பேர் பெண்மையோ

M:பஞ்சணை வேண்டுமோ

நெஞ்சணை போதுமே

பஞ்சணை வேண்டுமோ

நெஞ்சணை போதுமே

கைவிரல் ஓவியம் காண

காலையில் பூமுகம் நாண

F:பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்

போரிடும் மேனிகள் துள்ள

புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்

பேசும் மந்திரம் என்ன

F:இன்பமே

உந்தன் பேர் வள்ளலோ

F:மல்லிகைத் தோட்டமோ

வெண்பனிக் கூட்டமோ

மல்லிகைத் தோட்டமோ

வெண்பனிக் கூட்டமோ

M :மாமலை மேல் விளையாடும்

மார்பினில் பூந்துகிலாடும்

F:மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்

மேகமும் வாழ்த்திசை பாடும்

M:மாளிகை வாசலில் ஆடிய தோரணம்

வான வீதியில் ஆடும்

M:இன்பமே...

உந்தன் பேர் பெண்மையோ

என் இதயக் கனி

நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி

என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி

F:இன்பமே...உந்தன் பேர் வள்ளலோ