menu-iconlogo
logo

rathiriyil poothirukkum

logo
Paroles
ஆ ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

பெ வீணை எனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆ கைவிரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்

பெ வீணை எனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆ கைவிரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

ஆ ஜீவ நதி நெஞ்சினிலேஆடும்

போதும் ஓடும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

ஆ மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெ மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

ஆ மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெ மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

ஆ வாழை இலை நீர்

தெளித்து போடடி என் கண்ணே

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

பெ ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ண

ஆ சேலைச் சோலையே பருவ

சுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

பெ ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

rathiriyil poothirukkum par S Janaki/Jayachandra - Paroles et Couvertures