பாடகி : சுஜாதா மோகன்
பாடகா் : உன்னி மேனன்
இசையமைப்பாளா் : சிற்பி
பெண் : …………………………………
ஆண் : என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
ஆண் : உன்னை மழை
என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா உன்னை நான் என்பதா
பெண் : என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
பெண் : …………………………………
ஆண் : நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம்
வரை கரையாகிறேன்
பெண் : இரவாக நீயும்
நிலவாக நானும் நீயிருக்கும்
நேரம் வரை உயிா் வாழ்கிறேன்
ஆண் : முதல் நாள்
என் மனதில் விதையாய்
நீ இருந்தாய் மறுநாள்
பாா்க்கையிலே வனமாய்
மாறிவிட்டாய் நாடி துடிப்போடு
நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
பெண் : என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
பெண் : …………………………………
பெண் : பூலோகம் ஓா்
நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிா் உந்தன் மூச்சு
காற்றாகுமே
ஆண் : ஆகாயம் ஓா்
நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன்
கையில் விளக்காகுமே
பெண் : அன்பே நான்
இருந்தேன் வெள்ளை
காகிதமாய் என்னில் நீ
வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில்
நானே திாி ஆகிறேன்
தினம் திாியாகிறேன்
ஆண் : என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
ஆண் : உன்னை மழை
என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா உன்னை நான் என்பதா
பெண் : என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா
இந்த அழகான பாடலை உங்களுக்காக பதிவுச் செய்தவர்
உங்களின் நண்பன்
A ஈஸ்வரன்
மிக்க நன்றிகள் பல நண்பர்களே