பெ : உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…
பெ : உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…
தன்னைத்தானே கொஞ்சும்
பெண்ணைத்தானே எண்ணி
தனிமையிலே அழைத்தது
என்னைத்தானே….
உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…
ஆ : கட்டித்தரும் கன்னி
முத்துச்சரம்..
பத்துத்தரம் எந்தன் பக்கம் வரும்...
கட்டித்தரும் கன்னி முத்துச்சரம்...
பத்துத்தரம் எந்தன் பக்கம் வரும்
சிட்டுக்கள் போல
தொட்டுக்கொண்டாட
நேரம் வரவில்லை
சித்திரம் போல நித்திரை போக
தூது வரவில்லை
உன்னைத்தானே...ஹேய்
உன்னைத்தானே…
உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…
பெ : வஞ்சிக்கொடி இவள்
நெஞ்சுக்குள்ளே...
கொஞ்சும் மொழி
உந்தன் சொந்த மொழி
வஞ்சிக்கொடி இவள்
நெஞ்சுக்குள்ளே..
கொஞ்சும் மொழி
உந்தன் சொந்த மொழி
சொல்லிக்கொண்டாட
அள்ளிக்கொண்டோட
தூது வேண்டுமா...
இல்லை என்றாலும்
தொல்லை செய்யாமல்
சொந்தம் போகுமா..
உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே…
உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…
பெ: ஹாஹஹா
லல்லா...லா
ஓஹோஹ் ஓஹோஹ்
லா..ல..லா...,
ஆ : வட்டமிட்டாள்...
ஆசை வண்ணக்கிளி
சிக்கிக்கொண்டேன்.....
அவள் எண்ணப்படி
பெ : சொன்னது போதும்
சன்னிதி தேடி தூது பேச வா
ஆ : இன்னது காதல்
என்பதை காண
என்னை தேடி வா.....
உன்னை தானே ....ஹேய்
உன்னைத்தானே.....
உன்னை தானே...ஏய்
உன்னை தானே ..ஏய்
பெ : உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே....