menu-iconlogo
huatong
huatong
tmsoundararajan-neramithu-cover-image

Neramithu

T.M.Soundararajanhuatong
eaglebird1huatong
Letras
Grabaciones
நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத

பிறந்தது பேரெழுத

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத

பிறந்தது பேரெழுத

மேகத்திலே வெள்ளி

நிலா காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிறந்த பின்

கோலம் போடும் நேரங்கள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிறான்

என்னிடம் ஆசையில்லை

திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிறான்

என்னிடம் ஆசையில்லை

நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும்

உன்னை போல தோன்றுதே

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்னும் ஒன்று வேண்டும் என்று

தெய்வத்திடம் கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே போதும் என்றாள்

தேவி என் காதினிலே

ராத்திரி ராத்திரி

தூக்கம் கெட்டால் என்ன

பிள்ளை கூட இன்பமே

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத

நான் எழுத

பிறந்தது பேரெழுத

பிறந்தது பேரெழுத..

Más De T.M.Soundararajan

Ver todologo