menu-iconlogo
logo

Naam Oruvarai Oruvar

logo
Letras
பெ: நாம் ஒருவரை ஒருவர்

சந்திப்போம் என காதல்

தேவதை சொன்னாள்

ஆ: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெ: நாம் ஒருவரை ஒருவர்

சந்திப்போம் என

காதல் தேவதை சொன்னாள்

என் இடது கண்ணும் துடித்தது

உனைக் கண்டேன்

இந்நாள் பொன்னாள்

பெ: நாம் ஒருவரை ஒருவர்

சந்திப்போம் என

காதல் தேவதை சொன்னாள்

என் இடது கண்ணும் துடித்தது

உனைக் கண்டேன்

இந்நாள் பொன்னாள்

பட்டப் பகலென நிலவிருக்க

அந்த நிலவினில் மலர் சிரிக்க

அந்த மலரினில் மதுவிருக்க

அந்த மதுவுண்ண மனம் துடிக்க...ஆ

பெ: நாம் ஒருவரை

ஒருவர் சந்திப்போம் என

காதல் தேவதை சொன்னாள்

என் இடது கண்ணும் துடித்தது

உனைக் கண்டேன்

இந்நாள் பொன்னாள்

பெ: நீர் குடித்த மேகம்

என் நீலவண்ணக் கூந்தல்

நீர் குடித்த மேகம்

என் நீலவண்ணக் கூந்தல்

அந்த நீலவண்ணக் கூந்தல்

அது நீயிருக்கும் ஊஞ்சல்..

பெ: பால் கொடுத்த வெண்மை

என் பளிங்கு போன்ற மேனி

பால் கொடுத்த வெண்மை

என் பளிங்கு போன்ற மேனி

வெண்பளிங்கு போன்ற மேனி

அதில் பங்கு கொள்ள வா நீ

பெ: வட்டக் கருவிழி வரவழைக்க

அந்த வரவினில் உறவிருக்க

அந்த உறவினில் இரவிருக்க

அந்த இரவுகள் வளர்ந்திருக்க..ஆ

பெ: நாம் ஒருவரை

ஒருவர் சந்திப்போம்

என காதல் தேவதை சொன்னாள்

ஆ: நான் தொடர்ந்து போக

என்னை மான் தொடர்ந்ததென்ன

நான் தொடர்ந்து போக

என்னை மான் தொடர்ந்ததென்ன

பொன் மான் தொடர்ந்த போது

மனம் மையல் கொண்டதென்ன

ஆ: மை வடித்த கண்ணில்

பெண் பொய் வடித்ததென்ன

மை வடித்த கண்ணில்

பெண் பொய் வடித்ததென்ன

கண் பொய் வடித்த பாவை

என் கை பிடித்ததென்ன

ஆ: வெள்ளிப் பனி

விழும் மலையிருக்க

அந்த மலையினில் மழையடிக்க

அந்த மழையினில் நதி பிறக்க

அந்த நதி வந்து கடல் கலக்க....

ஆ: நாம் ஒருவரை ஒருவர்

சந்திப்போம் என

காதல் தேவதை சொன்னாள்

பெ: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ: என் வலது கண்ணும் துடித்தது

உனைக் கண்டேன்

இந்நாள் பொன்னாள்

உனைக் கண்டேன்

இந்நாள் பொன்னாள்