menu-iconlogo
logo

Sothanai Mel Sothanai

logo
Letras
சோதனை... மேல்.... சோதனை

போதுமடா சாமி

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

வேதனைதான்

வாழ்க்கை என்றால்

தாங்காது பூமி

வேதனைதான்

வாழ்க்கை என்றால்

தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு

நீ போட்டது

அதில் பந்தம் ஒருகால் விலங்கு

நான் போட்டது

சொந்தம் ஒரு கை விலங்கு

நீ போட்டது

அதில் பந்தம் ஒருகால் விலங்கு

நான் போட்டது

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா

ஆறுதல் சொல்ல

நான்அவதாரம் இல்லையம்மா

தத்துவம் சொல்ல

ஆதாரம் இல்லையம்மா

ஆறுதல் சொல்ல

நான்அவதாரம் இல்லையம்மா

தத்துவம் சொல்ல

பரிகாரம் தேடி இனி

எவ்விடம் செல்ல

எனக்கு அதிகாரம் இல்லையம்மா

வானகம் செல்ல

ஒரு நாளும் நான் இதுபோல்

அழுதவனல்ல

அந்த திருநாளை மகன்கொடுத்தான்

யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

வேதனைதான்

வாழ்க்கை என்றால்

தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

தானாட வில்லையம்மா

சதையாடுது

அது தந்தை என்றும்

பிள்ளைஎன்றும்

விளையாடுது

தானாட வில்லையம்மா

சதையாடுது

அது தந்தை என்றும்

பிள்ளைஎன்றும்

விளையாடுது

பூவாக வைத்திருந்தேன்

மனமென்பது

அதில் பூநாகம்

புகுந்து கொண்டு

உறவென்றது

அடி தாங்கும் உள்ளம்

இது இடி தாங்குமா

இடி போல பிள்ளை வந்தால்

மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி

வேதனைதான்

வாழ்க்கை என்றால்

தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை.....

போ.....துமடா சா....மி