நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
எங்கே நானென்று தேடட்டும் என்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த
எங்கே நானென்று தேடட்டும் என்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்