கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்..
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்..
நெஞ்சிலே ஆசை வந்தால்...
நீரிலும் தேனூறும்....
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்...
நெல்லிலே மணியிருக்கும்...
நெய்யிலே மணமிருக்கும்...
நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால்
சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஓர் நினைவு...
பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஓர் நினைவு..
முன்னாலே முகம் இருந்தும்...
கண்ணாடி கேட்பதென்ன...
கண்ணாடி கேட்பதென்ன
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
சொந்தமோ புரியவில்லை
சொல்லவோ மொழியுமில்லை
சொந்தமோ புரியவில்லை
சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீ அறிந்தால்
இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்..
நெஞ்சிலே ஆசை வந்தால்
நீரிலும் தேனூறும்..
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்