menu-iconlogo
logo

Neela Niram Vaanukkum

logo
Letras
ஆண் :நீலநிறம் வானுக்கும்

கடலுக்கும் நீலநிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்

காரணம் ஏன் கண்ணே உன்கண்ணோ

நீலநிறம் ம்ம்ம்ம்…..

ஆண் : தாமரை பூவிலே

உந்தன் இதழ்கள்

தந்ததென்ன சிவப்போ

பெண் : மீன்களின் அழகையே

எந்தன் விழிகள் தந்ததாய்

நினைவோ

ஆண் : தாமரை பூவிலே

உந்தன் இதழ்கள்

தந்ததென்ன சிவப்போ

பெண் : மீன்களின் அழகையே

எந்தன் விழிகள் தந்ததாய்

நினைவோ

ஆண் : அந்த முகில் உந்தன்

கருங்கூந்தல் விளையாட்டோ

பெண் : உங்கள் கவிதைக்கு

எந்தன் மேனி விளையாட்டோ

ஆண் : நீல நிறம்

பெண் : ஆஹா ...ஆ

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம் பெண் : ஆஹா...

காரணம் ஏன் கண்ணே

உன் கண்ணோ

நீல நிறம் ம்ம்ம்ம் …..

ஆண் : இலைகளும் கனிகளும்

உன் இடையில் வந்ததோர் அழகோ

பெண் : இயற்கையின் பசுமையே

எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

ஆண் : இலைகளும் கனிகளும்

உன் இடையில் வந்ததோர் அழகோ

பெண் : இயற்கையின் பசுமையே

எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

ஆண் : அந்த நதி என்ன

உன்னை கேட்டு நடைபோட்டதோ

பெண் : இங்கு அதை பார்த்து

உன் நெஞ்சம்இசை போட்டதோ

பெண் : நீல நிறம்

ஆண் : ஆஹா...ஆ..

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணா

என் கண்ணோ

நீல நிறம் ம்ம்ம்ம் ….

ஆண் : கோவிலின் சிலைகளே

உன் கோலம் பார்த்த

பின் படைப்போ

பெண் : கோபுர கலசமே என்

உருவில் வந்ததாய் நினைப்போ

ஆண் : கோவிலின் சிலைகளே

உன் கோலம் பார்த்த

பின் படைப்போ

பெண் : கோபுர கலசமே என்

உருவில் வந்ததாய் நினைப்போ

ஆண் : இது தடை இன்றி

விளையாடும் உறவல்லவா

பெண் : அதில் தமிழ் கூறும்

உவமைகள் சுவையல்லவா

ஆண் : நீல நிறம்

பெண் : ஆஹா...ஆ

வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே

உன் கண்ணோ

நீல நிறம் ம்ம்ம்ம்…..