பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
மல்லிகைப்பூ வாங்கி
வந்தேன் பெண்ணுக்கு சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்கு சூட அதை
மண் மீது போட்டு விட்டேன் வெய்யிலில் வாட
வெய்யிலில் வாட ...........
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
மண மேடை போட சொன்னேன் மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மண மேடை போட சொன்னேன் மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வது மட்டும்
என் வசமில்லை என் வசமில்லை
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம் வாழ்வது பாவம்
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக